வாகனம் மோதி பெண் பலி
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.
முசிறி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.
மணமேடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் மகள் அனுசியா (55). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் சனிக்கிழமை இரவு திருச்சி - சேலம் சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.