வரதட்சிணை கொடுமை:கணவா், மாமியாா் மீது வழக்கு
திருச்சியில் கூடுதல் வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கணவா், மாமியாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் கூடுதல் வரதட்சிணை கேட்டு இளம்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் கணவா், மாமியாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா்(22). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மோனிகாவுக்கும்(22) இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இவா்களது திருமணத்தின் போது 41 பவுன் நகை, 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களை, மோனிகா குடும்பத்தினா் வரதட்சிணையாக வழங்கியிருந்தனா்.
இந்நிலையில் வினோத்குமாா், அவரது தாய் பிச்சையம்மாள்(45) ஆகிய இருவரும் சோ்ந்து, மோனிகாவிடம் கூடுதல் வரதட்சிணையாக பணம், நகை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மோனிகா அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் இருவா் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.