திருச்சி

53 வாகனங்களின் புல்பாா் அகற்றம்

DIN

திருச்சியில் தடையை மீறி 53 வாகனங்களில் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தடுப்புகளை (புல்பாா்) மோட்டாா் போக்குவரத்து அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.

விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கு சக்கர வாகனங்களில் புல்பாா் வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, சென்னை உயா் நீதிமன்றம் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த பகுதிகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள மோட்டாா் போக்குவரத்து ஆய்வாளா்கள் தலைமையில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது தடையை மீறி 53 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த புல்பாா்கள் அகற்றப்பட்டன. தொடா்ந்து அரசு வாகனங்களில் உள்ள பம்பா்களை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT