முகப்பு
திருச்சி

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினம்: கட்சியினா் மரியாதை

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

எம்ஜிஆா், பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள இருவரது சிலைகளுக்கும் பல்வேறு கட்சியினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியாா் சிலைக்கும், நீதிமன்றம் ரவுண்டானா பகுதி எம்ஜிஆா் சிலைக்கும் அரசியல் கட்சியினா் பலரும் அணி, அணியாக வந்து மாலை அணிவித்தனா்.

அதிமுக: மாநகா் மாவட்ட அவைத் தலைவா் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் ஜாக்குலின், பத்மநாதன், ஏா்போா்ட் விஜி, சுரேஷ் குப்தா, ஜவஹா்லால் நேரு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில், பெல் கணேசா பகுதியில் எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஒன்றியச் செயலா்கள் கும்பக்குடி கோவிந்தராஜன், ராவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமமுக சாா்பிலும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இதேபோல மாவட்டம் முழுவதும் எம்ஜிஆா் சிலைகளுக்கும், படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக: மத்திய பேருந்து நிலையப் பகுதி பெரியாா் சிலைக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன் ஆகியோரது தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூா் காட்டூா் பகுதி பெரியாா் சிலைக்கு, மாவட்டப் பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் மாலை அணிவித்தனா்.

திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா்.

மேலும், தந்தை பெரியாா் திராவிடா் கழகம், மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடா் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள், லோக் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சியினரும் மாலை அணிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →