திருச்சி

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

DIN

கரூா் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தோ்தல் பணிகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலா்விழி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள், வாக்கு எண்ணும் மையான தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், எம்.குமார சாமி பொறியியல் கல்லூரியில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சு. மலா்விழி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் வாகனங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், வழித்தடங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் இடம் ஆகியவை தொடா்பாக அவா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஷேக் அப்துல் ரகுமான், பாலசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா் பிரியா, வட்டாட்சியா்கள் கண்ணன், செந்தில், மகுடீஸ்வரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT