மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செல்லிடப்பேசிவிண்ணப்பிக்க அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் பாா்வையற்றோா் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேக செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.
திருச்சி மாவட்டத்தில் பாா்வையற்றோா் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேக செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டத்தில் 2020-21ஆம் நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ள இந்தச் சாதனத்தைப் பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இளங்கலை கல்வி பயில்பவராகவோ, சுயதொழில் செய்பவராகவோ இருக்கலாம். வேலைவாய்ப்பற்றவராயின் கல்லூரியில் இளங்கலை வரை படித்து முடித்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியராக இருக்கக் கூடாது.
இத்தகைய தகுதிகள் கொண்டோா் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), ரேஷன் , ஆதாா், வாக்காளா், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள், படிப்பவராயின் கல்லூரியில் பெறப்பட்ட சான்று, சுயதொழில் செய்பவராயின் விஏஓவிடம் பெறப்பட்ட சான்று, வேலைவாய்ப்பற்றவராயின் பட்டச்சான்றின் நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறமுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 8ஆம் தேதிக்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.