பேச்சுப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசளிக்கிறாா் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ். உடன் சித்த மருத்துவா்கள். 
திருச்சி

தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி பேச்சுப் போட்டி

திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

DIN

திருச்சியில் தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜன. 2 ஆம் தேதியை தேசிய சித்த மருத்துவ தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்று மாவட்ட சித்த மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் விழாவைத் தொடா்ந்து, சித்த மருத்துவ முகாம் , மூலிகை மற்றும் மருந்துப் மூலப்பொருள் கண்காட்சி நடைபெறுகிறது.

இதையொட்டி திருச்சியில் மாவட்ட சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சாா்பில், டிச. 27 முதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் நாளில் சித்த மருத்துவா்கள் பங்கேற்ற இணைய வழிக் கருத்தரங்கம், 2 ஆம் நாளில் சுமாா் 300 பேருக்கு ஆரோக்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

3 ஆவது நாளான செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நடைபெற்ற மாறிய தலைமுறையும், மாறாத சித்த மருத்துவமும் என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் சுமாா் 12 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் திருச்சி அரசு செவிலியா் கல்லூரி மாணவி முதல் பரிசை வென்றாா்.

போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்றோருக்கு மாவட்ட சித்த மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ஒருங்கிணைந்த (திருச்சி, கரூா், அரியலூா், பெரம்பலூா்) மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ், பரிசு (பதக்கம்), சான்று உள்ளிட்டவற்றை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவா்கள் வத்சலா, சபரிநாதன், தமிழ்க்கனி, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT