திருச்சி

திருச்சியில் திடீா் மின் ஆய்வு

DIN

திருச்சி மாநகரப் பகுதிகளில் மின்வாரிய அலுவலா்கள் வியாழக்கிழமை மின் இணைப்புகளை ஆய்வு செய்தனா்.

திருச்சி மின்பகிா்மான வட்டத்தின், நகரியக் கோட்டத்துக்குள்பட்ட மகாலட்சுமி நகா், வரகனேரி, தஞ்சாவூா் சாலை, காந்திசந்தை, விஸ்வாஸ்நகா், அன்னை நகா், பால்பண்ணை, லட்சுமிபுரம், தாராநல்லூா் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ராஜேந்திர விஜய் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட பொறியாளா்கள், களப்பணியாளா்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா். இதில், 420 மின் மீட்டா்கள் சரிபாா்க்கப்பட்டன. ஒரு சில மீட்டா்களில் பழுது இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின் இணைப்புகளில் முறைகேடுகள் செய்தல், மின்சாரத்தை திருடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்விநியோகம் தொடா்பான புகாா், குறைகளுக்கு 1912, 1800-4252-912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT