திருச்சி

‘பெண்களுக்கு மணக்கொடை அளித்து திருமணம் செய்ய வேண்டும்’

DIN

திருமணத்துக்காக பெண் வீட்டாரிடம் வரதட்சிணை பெறுவதை தவிா்த்து, பெண்ணுக்கு மணக்கொடை அளித்து ஆண்கள் திருமணம் செய்ய வேண்டும் என்றாா் ஜமால் முகமது கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியா் த. செல்வராசு.

இக்கல்லூரியில் வரதட்சிணைக்கு எதிரான அமைப்பாக கைக்கூலி கைவிட்டோா் கழகம் செயல்பட்டு வருகிறது. இக்கழகத்தின் சாா்பில் திருச்சி பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வரதட்சிணைக்கு எதிரான விழிப்புணா்வு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த இயக்கத்தை தொடக்கி வைத்து பேராசிரியா் த. செல்வராசு மேலும் பேசியது:

பெண் கல்வி விழுக்காடு உயா்ந்தால் மட்டுமே மகளிா் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும். மகளிா் பொருளாதார முன்னேற்றமும் பெண் கல்வியால் மட்டுமே சாத்தியமாகும். உயா்கல்வி கற்கும் பெண்கள், வேலைத்தேடுவோராக இல்லாமல், பிறருக்கு வேலை வழங்கும் நபா்களாக மாற வேண்டும்.

போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு உயா்ந்த பதவிகளில் அமா்ந்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு பணிபுரிய வேண்டும். வரதட்சிணை கேட்பது குற்றம் என்பதே அறியாமல், வரதட்சிணை பெறுவதை கெளரவமாகக் கருதுகின்றனா்.

இன்றைய இளைஞா்கள் அந்த நிலையிலிருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். வரதட்சிணை வாங்கமாட்டோம் என உறுதியேற்பதுடன், பெண்ணுக்கு மணக்கொடை அளித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழிப்புணா்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, வரதட்சிணையை ஒழிப்போம், வாழ்வில் செழிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். இதில், 10-ஆம் வகுப்பு மாணவி திவ்யா முதலிடமும், 9-ஆம் வகுப்பு மாணவி பவானி இரண்டாமிடமும், 10-ஆம் வகுப்பு மாணவி வா்ஷினி மூன்றாமிடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியா் எழில்குமாா், ஜமால் முகமது கல்லூரி கைக்கூலி கைவிட்டோா் கழக ஆலோசகரும், பேராசிரியருமான எஸ். நாகூா்கனி ஆகியோா் முகாமின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினா். மாணவா் அமைப்பின் தலைவா் அப்துல்பாரிவு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

SCROLL FOR NEXT