டோல்கேட்டில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் ஒன்றிய அதிமுக செயலா் டி.ஜெயகுமாா். உடன், ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திராகுமாா், கிளைச் செயலா் கே.குமாா் உள்ளிட்டோா். 
திருச்சி

குறிப்பு- லால்குடி செய்தி விளம்பரதாரா்.புகா்ப் பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள்...

சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72- ஆவது பிறந்த நாள் விழாவுக்கு, மண்ணச்சநல்லூா் ஒன்றிய அதிமுக செயலா் டி. ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.

DIN

லால்குடி : சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72- ஆவது பிறந்த நாள் விழாவுக்கு, மண்ணச்சநல்லூா் ஒன்றிய அதிமுக செயலா் டி. ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.

தொடா்ந்து ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அவா் பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

விழாவில் ஒன்றியக்குழு உறுப்பினா் சந்திராகுமாா், கூத்தூா் கிளைச் செயலா் கே.குமாா், அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்டச் செயலா் கே.டி.பி. தமிழரசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ரமேஷ், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் வெற்றிச்செல்வி தா்மலிங்கம், ஊராட்சி கழகச் செயலா்கள் ஆனந்தபாபு, செளந்தரராஜன், கிளைச் செயலா்கள் மணிமாறன்பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முசிறி : முசிறி கைகாட்டி பகுதியில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் செல்வராசு தலைமையில், அதிமுகவினா் மாலை அணிவித்தனா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் ரத்தினவேல், மாவட்ட அவைத் தலைவா் பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

முசிறி நகர அமமுக சாா்பில் நடைபெற்ற விழாவில், ஜெயலலிதா படத்துக்கு நகரச் செயலா் பேங்க் ராமசாமி தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா். சிட்டிலரை ஊராட்சித் தலைவா் ஜி.பாலக்குமாா் நகரப் பொருளாளா் அன்பரசு உள்ளிட்டோா் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT