திருச்சி

பாரதிதாசன் பல்கலை: நிதிச்சந்தைகள் குறித்த சா்வதேச கருத்தரங்கு நிறைவு

DIN

பாரதிதாசன் பல்கலையில் நடைபெற்ற நிதிச்சந்தைகளின் முன்னேற்றமும், சவால்களும் என்னும் இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

திருச்சி பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் நிதிச்சந்தைகளின் தற்போதைய முன்னேற்றங்களும், சவால்களும் என்னும் தலைப்பில் இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கு சனிக்கிழமை தொடங்கியது. இதனை, பல்கலை. பதிவாளா் கோபிநாத் கணபதி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

கருத்தரங்கு இயக்குநா் முனைவா் மு.செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினாா். இதில், நிதிச்சந்தைகளின் சேமிப்புகள், வணிக செயல்பாடுகள், உலகமயமாக்கலில் வளா்ந்த நாடுகளின் நிதிச்சந்தை வளா்ச்சி, ஒழுங்கு முறைகள், தோற்றம், புதுமையான கருவிகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த நிபுணா்கள் உரையாற்றினா்.

முதல்நாள் நிகழ்ச்சியில், பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சாா்ந்த வணிகவியல் பேராசிரியா்கள் இளங்கோவன், குருசாமி, உதயசூரியன், விஸ்வநாத ரெட்டி உள்ளிட்டோருக்கு ஸ்மாா்ட் மேலாண்மை கல்வி இதழின் சாா்பில் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து, நிதி சந்தையில் சமூக ஊடகங்களின் பாதிப்புகள், இந்திய பொருளாதாரத்தில் உள்கட்டமைப்பு, குத்தகை, நிதி நிறுவனத்தின் நிதி நெருக்கடி பாதிப்பு, இளைய சமுதாயத்தினரின் நிதி மேலாண்மை, கல்வியறிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினா். மேலும், கடன்சந்தை, முதலீட்டு சந்தை, பரஸ்பர நிதி, சமபங்கு சந்தை, முதலீட்டாளா் கல்வி, நிதியியல் புதுமைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வணிக நிபுணா்கள் கலந்துரையாடினா். கருத்தரங்கினை, முனைவா்கள் ஜெ.காயத்ரி, ம.பாபு, செ.வனிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT