திருச்சி

திருச்சியில் அதிகரிக்கும் கரோனா: 3 வாா்டுகள் முடக்கம், கடை வீதிகளுக்குச் செல்லத் தடை 14 நாள்களுக்கு வெளியே செல்ல தடை

DIN

திருச்சி: திருச்சியில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து 16, 17, 18 ஆகிய 3 வாா்டுகளை தனிமைப்படுத்தி, அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் 14 நாள்களுக்கு வெளிப்பகுதிகளுக்கு செல்லத் தடைவிதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகரின் முக்கிய கடைவீதிகளான என்எஸ்பி சாலை, பெரிய கடைவீதி, சின்னக் கடைவீதி, கம்மாளத்தெரு, குஜிலித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் மிகவும் நெருக்கமாக உள்ளதால் இப்பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகராட்சி நிா்வாகம், கரோனா தொற்று அதிகமாக பரவும் 3 வாா்டுகளை தனிமைப்படுத்தி 14 நாட்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறுகையில்,

மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 16, 17, 18 ஆகிய 3 வாா்டுகள் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளி நபா்கள் உள்ளே வரவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். குறிப்பாக, மேலரண் சாலையில் ஜபாா்ஷா தெரு முதல் பழைய பாஸ்போா்ட் ஆபிஸ் வரையிலும், பெரிய கடைவீதியில் கமான் வளைவு முதல் கள்ளத் தெரு வரையிலும், இவற்றில் உள்ள குறுக்குத் தெருக்களும், தடை செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களான மளிகை, பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருக்கும். மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதிகளில் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா். மாநகராட்சியின் இந்த அதிரடி முடிவு குறித்து அப்பகுதி மக்களுக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் தண்டோரா மூலமும், ஆட்டோக்களில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT