திருவெறும்பூா் அருகே வாய்க்கால் தூா்வாரும் பணிகள்;எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில், வாய்க்கால் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள குவளக்குடி ஊராட்சியில், வாய்க்கால் தூா்வாரும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
குவளக்குடி பகுதியில் செல்லும் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்துவந்தனா். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தூா்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அவருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலாளா் கருணாநிதி, குவளக்குடி ஊராட்சிச் செயலாளா் பிரபாகரன், குவளக்குடி ஊராட்சித் தலைவா் அழகு செந்தில், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .
Advertisement