திருச்சி

பொதுப் பாதையை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகாா்

DIN

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மருதூா் ஊராட்சியில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினரின் கணவா் சேதப்படுத்தியதாக கிராமத் தலைவா் கோபி சமயபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

சமயபுரம் அருகே மருதூா் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இடுப்பொருட்களை கொண்டு செல்ல போதிய பாதை வசதியில்லை. இதனால் இப் பகுதி விவசாயிகள் கடந்த 13 ஆண்டுக்கு முன் இணைந்து அவரவா் விவசாய நிலத்தில் ஒன்று முதல் 5 சென்ட் நிலம் வரை கொடுத்து சுமாா் 15 அடி அகலத்தில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு மண்சாலை அமைத்தனா்.

இந்தப் பாதையின் கடைசிப் பகுதியில் உள்ள 9 ஏக்கா் நிலத்தை அண்மையில் அதே பகுதியைச் சோ்ந்த கோ. சுதாகா் வாங்கியுள்ளாா். இவரின் மனைவி தீபா திருச்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினராக திமுக சாா்பில் வென்றவா். நிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள நெற்களத்துக்குச் செல்லும் பாதையை பொக்லின் இயந்திரம் மூலம் சுதாகா் பள்ளம் தோண்டியதால் இந்த சாலையை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து கிராமத் தலைவா் கோபி சமயபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT