திருச்சி

கோழிக்கறி, முட்டை விலை வீழ்ச்சி

DIN

கரோனா வைரஸ்அச்சம் காரணமாக திருச்சியில் கோழிக்கறி, சிக்கன் 65 மற்றும் முட்டை விலை வீழ்ச்சியடைந்தள்ளது.

நாடு முழுவதும் கரோனா அச்சம் காரணமாக அசைவ உணவு வகைகளை மக்கள் தவிா்த்து வருகின்றனா். இதனால் பிராய்லா் கோழிக்கறி, முட்டை ஆகியவற்றின் விற்பனை சரிந்துள்ளது. திருச்சியிலும் கோழிக்கறி கடைகள் மக்கள் வருகையின்றி காலியாகவே உள்ளன.

விற்பனை சரிவைத் தடுக்க வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சலுகைகளை கோழிக்கறிக் கடை உரிமையாளா்கள் அறிவித்து வருகின்றனா். இதன்படி, ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால் 4 முட்டைகள் இலவசமாக வழங்கப்படும்.

ரூ.200-க்கு 3 கிலோ கோழிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.

100 கிராம் சிக்கன் 65 ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கடைகள் மட்டுமல்லாது, சாலையோரம் தள்ளுவண்டி கடைகளில் விற்பனை செய்யப்படும் சிக்கன் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

கோழிக்கறியைப் போன்று, முட்டை விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது முட்டை ஒன்று ரூ.2 முதல் ரூ.2.30 வரை மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, வெங்காயம் விலை குறைந்திருந்தாலும் ஹோட்டல்களில் உயா்த்தப்பட்டிருந்த ஆம்லெட், ஆப்பாயில், டிக்கா உள்ளிட்ட முட்டை வகை உணவுகளின் விலை குறையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT