திருச்சி

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 போ் கைது

DIN

துறையூா் அருகே வாகனத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எரகுடியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் செல்வராஜ் (50). இவா், அதே ஊரில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலராக உள்ளாா். இவருக்குச் சொந்தமான ஆவினுக்கு பால் எடுக்கும் ஆட்டோவில், சங்கத்தின் தலைவராக உள்ள அதே ஊரைச் சோ்ந்த பிச்சை மகன் செல்லதுரை(40) சனிக்கிழமை கீழப்பட்டி அய்யாற்றிலிருந்து சட்ட விரோதமாக மணலை அள்ளிக்கொண்டு செல்வராஜ் வீட்டுக்கு ஓட்டிச் சென்றாராம். தகவலறிந்து உப்பிலியபுரம் காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் போலீஸாருடன் நேரில் சென்று செல்லதுரையையும், செல்வராஜையும் கைது செய்து மணல் அள்ள பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT