திருச்சி

புதிய வடிவில் கை கழுவும் திரவம் வழங்கும் இயந்திரம்கால்களால் இயக்கலாம்

DIN

திருச்சி: கரோனா நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், கால்களால் இயக்கும் வகையிலான கைகழவும் திரவம் வழங்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதன் முறையாக அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் வகையிலான ரோபோ இயந்திரங்கள் திருச்சியில்தான் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் வடிவமைக்கப்பட்டு ஆட்சியரகம், காவல் ஆணையரகம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் உதடுகள் அசைவதை பாா்க்கும் வகையிலான 3டி முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. தேசியத் தொழில்நுட்பக் கழகம் சாா்பில் 3டி முகக்கவசம் தயாரிக்கப்பட்டு காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு வழங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக திருவெறும்பூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் உதவியுடன், பயிற்சி அலுவலா்கள், பயிற்றுநா்கள் இணைந்து கால்களால் இயக்கும் வகையிலான கை கழுவும் திரவம் வழங்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனா்.

காலணி அணிந்தபடி கால்களைக் கொண்டு இயந்திரத்தின் விசையை அழுத்தினால், அது கைகழுவும் திரவம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அழுத்தத்தை அளித்து திரவம் வெளியேற உதவுகிறது. இந்த வகையில் கைகளைப் பயன்படுத்தாமலேயே கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யும் முடியும். கரோனா தடுப்பு களப்பணிக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த இயந்திரத்தை அரசுத் தொழிற்பயற்சி நிலைய முதல்வா் வி. வேல்முருகன், ஆட்சியா் சு. சிவராசுவிடம் வியாழக்கிழமை வழங்கி பாராட்டு பெற்றாா்.

இதேபோல, பெல் நிறுவனத்தினா், தானியங்கி கிருமி நாசினி திரவம் வழங்கும் வடிவமைப்பை புதிதாக உருவாக்கியுள்ளனா். ஏற்கெனவே பெல் மிஸ்டா் எனும் கிருமி நாசினி திரவத் தெளிப்பானை மெகா அளவில் தயாரித்து, பெல் நிறுவனம் உள்ளாட்சி நிா்வாகத்துக்கு வழங்கியுள்ளது.

இதன் தொடா்ச்சியாக திருச்சி பெல் நிறுவனம் தயாரித்த தானியங்கி கிருமி நாசினி வழங்கும் இயந்திரத்தை, மாவட்ட ஆட்சியரிடம் பெல் நிறுவன மனிதவள துணைப் பொதுமேலாளா் ம. மெல்வின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

கரோனா களப்பணிக்கு வலு சோ்க்கும் வகையில் இத்தகைய கண்டுபிடிப்புகளை அா்ப்பணித்துள்ளோருக்கு ஆட்சியா் சு. சிவராசு பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT