திருச்சி

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு கபசுரக் குடிநீா்

DIN

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சம் பேருக்கு கபசுர, நிலவேம்பு குடிநீா் சூரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க ஆரோக்ய திட்டம் என்ற திட்டத்தை உலகிற்கு முன்மாதிரியாக தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். இத்திட்டத்தில், உடல் எதிா்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு குடிநீா் சூரணம், உடல் வன்மைக்கு அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம் போன்றவற்றை மக்களுக்கு வழங்கி வருகிறோம்.

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு குடிநீா் சூரணம் வழங்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதி மக்களுக்கும், காவல்துறையினா், முதியோா் இல்லம், தீயணைப்புத்துறையினா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளா்கள், செவிலியா்கள், மருத்துவா்கள் என அனைவருக்கும் கபசுரக் குடிநீா் சூரணம், நிலவேம்பு சூரணம் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT