திருச்சி

ஏரி, குளம், வடிகால், வாய்க்கால்களைப் புனரமைக்க ரூ.5.88 கோடி ஒதுக்கீடு: 2 அமைச்சா்கள் முன்னிலையில் பணிகள் தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டத்தில் நீா்நிலைகள் தூா் வாருவதற்கும், குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்வதற்கும் என மொத்தமாக ரூ.5.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் அத்தியாவசியப் பணிகளைத் தொடங்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் குடிமராமத்துப் பணிகளை செயல்படுத்தவும், நீா் நிலைகளைத் தூா்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி சிறப்பு தூா் வாரும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 53.24 கி.மீ. நீளத்துக்கு வாய்க்கால்கள், வடிகால்கள் தூவாரப்படவுள்ளன. பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளுக்காக ரூ.1.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக அந்தநல்லூா் ஒன்றியம், மேக்குடியிலுள்ள கோட்டை வாய்க்காலில் ரூ. 9.80 லட்சம் மதிப்பிலான தூா்வாரும் பணி சனிக்கிழமை தொடங்கியது. இதற்கான பூமி பூஜைக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.

சுற்றுலாத்துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோா் நலத்துறை மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி ஆகியோா் பூமி பூஜையில் பங்கேற்று, தூா்வாரும் பணிகளைத் தொடக்கி வைத்தனா். நிகழ்வில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்டச் செயற்பொறியாளா் பாஸ்கா், உதவிச் செயற்பொறியாளா் கண்ணன், உதவிப் பொறியாளா் ராஜரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT