கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
மணப்பாறை அருகேயுள்ள கரூா் மாவட்டம், சந்தையூரில் வசிக்கும் விவசாயி எஸ். குஞ்சானின் கால்நடைகள் வெள்ளிக்கிழமை மேய்ச்சலில் இருந்தபோது அவற்றில் 5 மாத சினை பசு 40 அடியாழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான வீரா்கள் பசுவை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா். பின்னா் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.