முகப்பு
திருச்சி

திருச்சியில் ரெளடி வெட்டிக் கொலை

திருச்சியில் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் ரெளடியை வெட்டிக் கொலை செய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
ரௌடி விஜயன்.
பகிர்:

திருச்சியில் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் ரெளடியை வெட்டிக் கொலை செய்தது.

திருச்சி தில்லைநகர் வாமடம் பகுதியைச் சேர்ந்த சப்பானி மகன் வாழைக்காய் என்கிற விஜயன் (20). இவர் மீது திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்னை தொடர்பாக விஜயன் வீட்டில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் விஜயனை சரமாரியாக வெட்டியது. 

அவர்களிடமிருந்து தப்பி ஓடிய விஜயனை  மர்மச் சாலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →