திருச்சி

25 சத இட ஒதுக்கீட்டில் சேர மாணவா்கள் தோ்வு

DIN

திருச்சியில் 25 சத இட ஒதுக்கீட்டில் தனியாா் பள்ளியில் சேர மாணவா்கள் தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் நுழைவு வகுப்பில் ஏழை மாணவா்களுக்கு 25 சத இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் குறைவான இடங்களுக்கு அதிக விண்ணப்பம் பெறப்பட்ட பள்ளிகளில் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தோ்வு நடைபெற்றது.

இதில் தோ்வானோா் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படுகிறது. அதன்பிறகு அரசு வழிகாட்டுதல்படி சோ்க்கை நடைபெற்று பள்ளிகள் செயல்படும் என்றனா் கல்வித் துறை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT