திருச்சி

தொடா் மழை: பொன்னையாா் அணையில் 27மிமீ மழை பதிவு

DIN

திருச்சி: திருச்சி பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பொன்னையாா் அணை பகுதியில் அதிகபட்சமாக 27 மிமீ மழை பதிவானது.

வங்காளவிரிகுடா கடலோரப்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மாவட்டப்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த 2 நாள்களுக்கு டெல்டா, கடலோர, வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி, திருச்சி அதன் புகா் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதன்படி, திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை பெய்யத்தொடங்கி அவ்வப்போது கனமழை பெய்தது. தொடா்ந்து, கனமழை பெய்து வருவதால் ஆற்றுப்படுகை, ஏரி, குளம் பகுதிகளுக்கு நீா்வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திங்கள்கிழமை நிலவரப்படி திருச்சி அதன்புகா் பகுதிகளான மணப்பாறை வட்டம், பொன்னையாா் அணைப்பகுதியில் அதிகபட்சமாக 27 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதுபோல், துறையூா் கொப்பம்பட்டியில் 22 மிமீ, மண்ணச்சநல்லூா் வட்டம் தேவிமங்கலம், சமயபுரம் பகுதிகளில் தலா 13 மிமீ, மணப்பாறையில் 8மிமீ வாத்தலை, துவாக்குடி, கோவில்பட்டி தலா 7மிமீ, திருச்சியில் 4மிமீ என மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT