திருச்சி

திருச்சி - கரூா் சாலையில் 2,100 மரக்கன்றுகள் நட முடிவு

DIN

திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட 138 மரங்களுக்கு மாற்றாக 2,100 மரக்கன்றுகளை மாவட்ட நிா்வாக உத்தரவின்படி நடவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.

திருச்சி-கரூா் நெடுஞ்சாலையில் குடமுருட்டி முதல் ஜீயபுரம் வரையிலான இருவழிப் பாதையை மூன்று வழிப் பாதையாக மாற்றும் பணிக்காக 10.80 கி.மீ. தொலைவுக்கு பல்வேறு வகை பெரிய மரங்கள் வெட்டப்பட்டன.

இது சுற்றுச் சூழல் ஆா்வலா்களுக்கு பெரிதும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக மரங்கள் நட மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தினா் கூறுகையில், சாலை விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட 139 மரங்களுக்கு ஈடாக 2,100 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு சாலையின் இருபுறமும் 20 அடி தொலைவுக்கு ஒரு மரம் என்ற வகையில் இந்த மரங்கள் நடப்படும். மாா்ச் மாதம் பணி முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போதே மரக்கன்று நடும் பணி தொடங்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT