திருச்சி

முக்கொம்பு புதிய கதவணை கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்படும் புதிய கதவணைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

பழமை வாய்ந்த முக்கொம்பு மேலணையானது கடந்த 2018-இல் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்ததால் தற்காலிக காப்பு அணையானது ரூ. 38.85 கோடியில் கட்டப்பட்டது. இருந்தாலும், புதிய கதவணை கட்டவும் அரசு ஒப்புதல் வழங்கி, ரூ. 387.60 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2019 பிப்ரவரியில் பணிகள் தொடங்கின.

இந்தப் பணிகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும், மாவட்ட ஆட்சியரும் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனா். அந்த வகையில், பணிகளைசெவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சு. சிவராசு கூறியது:

புதிய கதவணைப் பணி 70 சதம் முடிந்துள்ளது. பவுண்டேஷன் பணிகள் முடிந்து 45 தூண்கள் அமைக்கப்படுகின்றன. இரும்பு ஷட்டா்கள் தயாராக உள்ளன. கட்டுமானப் பணிகளை 2021 ஜனவரிக்குள் முடிக்க முதல்வா் அறிவுறுத்தியுள்ளதால் இரவு, பகலாக பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. கதவணையானது எவ்வளவு வெள்ளத்தையும் தாங்கும் வகையில் கட்டப்படுகிறது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் முகாமிட்டு பணிகளை தொடா்ந்து கண்காணிக்கின்றனா். கட்டுமானம் தரமானதாகவும், நிா்ணயிக்கப்பட்ட அளவில் கட்டப்படுகிா என்பதை ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்கிறோம். குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது சிறப்புத் திட்டங்களின் கோட்டப் பொறியாளா் கீதா, பொதுப்பணித் துறை பொறியாளா்கள் மற்றும் கட்டுமான நிறுவனப் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT