திருச்சி

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

வீர, தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதியான திருச்சி மாவட்டத்தினா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உயிா், சொத்து போன்றவற்றை காப்பதில் வீரதீரச் செயல்களை புரிந்த தமிழகத்தைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு வரும் குடியரசு தின விழாவின்போது தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம், விருது வழங்கப்படவுள்ளது.

இந்தப் பதக்கம் பெற வயது வரம்பில்லை.  இணைய தளத்தில் ஆன்லைனில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதோடு வீரதீர செயலுக்கான தொடா்புடைய ஆவணங்களுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணாவிளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு வரும் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் 20.11.2020-க்குள் தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பம் சமா்ப்பிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரியில் நேரிலோ, 0431-2420685 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT