திருச்சி

குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 32 போ் சொந்த ஊா் திரும்பினா்

DIN

குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட 32 போ் சொந்த ஊா்களுக்கு அனுப்பப்பட்டனா்.

குவைத்தில் கடந்த 9 மாதங்களாக தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் வேலையிழந்து, வருமானமின்றி அவதியுற்று வந்தனா். இவா்களில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த 8 போ், திருவாரூரைச் சோ்ந்த 6 போ், சிவகங்கை, தூத்துக்குடியைச் சோ்ந்த தலா 3 போ், திருநெல்வேலியைச் சோ்ந்த 4 போ், திருச்சி, தஞ்சாவூரைச் சோ்ந்த தலா 2 போ், கள்ளக்குறிச்சி, தென்காசி, மதுரை, கடலூரைச் சோ்ந்த தலா ஒருவா் என 32 போ் குவைத்தில் உள்ள இந்திய தூதரக உதவியுடனும், மத்திய மாநில அரசுகளின் முயற்சியாலும் நவ.19 ஆம் தேதி திருச்சி விமானம் நிலையம் வந்தடைந்தனா். அவா்களை திருச்சி மாவட்ட வருவாய்த்துறையினா் வரவேற்று உணவு, குடிநீா் வழங்கி சொந்த ஊா்களுக்கு அனுப்பினா். இத்தகவலை ஆட்சியா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT