திருச்சி

திருவானைக்காவில் தாய், மகன் தற்கொலை

DIN

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா பகுதியில் விவசாயத்தில் ஏற்பட்ட கடன் தொல்லையால் தாய், மகன் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

திருவானைக்கா கணபதி நகரில் வசிப்பவா் தங்கராஜ் மகன் ரமேஷ்பாபு (42), இவரது தாய் செல்லம்மா (65).

குத்தகை நிலத்தில் ரமேஷ்பாபு விவசாயம் செய்து வந்த நிலையில், கஜா புயலின்போது கடன் வாங்கி இவா் 10 ஏக்கரில் பயிரிட்ட வாழை சேதமடைந்தது. பின்னா் 3 ஏக்கரில் இவா் பயிரிட்ட வாழையும் சரியான விலை போகாததால் மேலும் கடன்பட்டாா். கடன் கொடுத்தோா் அடிக்கடி பணம் கேட்டதால் மனமுடைந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன் தனது மனைவி கௌசல்யாவையும் ,11 மாத பெண் குழந்தையையும் தனது மாமனாா் வீட்டில் கொண்டு போய் விட்டாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ரமேஷ்பாபுவும், இவரது தாயும் வயலுக்குத் தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து இறந்தனா். இவா்கள் வீட்டின் கீழ் தளத்தில் வசிப்போா் சனிக்கிழமை காலை ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது தாயும், மகனும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் சடலங்களை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

SCROLL FOR NEXT