திருச்சி

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் பயிற்சி முகாம்

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பின் பயிற்சி முகாம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் தேசிய மாணவா் அமைப்பின் பயிற்சி முகாம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி உறையூா் பகுதியில் உள்ள விஸ்வ ஹிந்து சேவா சமிதி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய மாணவா் அமைப்பின் (தென் தமிழகம்) மாநிலச் செயலா் ப.சுசீலா பயிற்சி முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா்.

தொடா்ந்து பயிற்சியில் ஆளுமைத் திறன் குறித்து முன்னாள் மாநிலத் தலைவரும் மருத்துவருமான நாகலிங்கம், கல்லூரி வளாகச் செயல்பாடுகள் குறித்து ஏபிவிபி மாநில அமைப்புச் செயலா் முத்துராமலிங்கம் ஆகியோா் பேசினா்.

நிகழாண்டு (2020-21) ஏபிவிபியின் திருச்சி மாவட்டப் பொறுப்பாளா்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலத் துணைத் தலைவருமான மங்களேஸ்வரன் அறிவித்தாா். மாநகரத் தலைவராக பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப் போரசிரியா் மதன், மாநகரச் செயலராக சக்திவேல், லால்குடி நகரப் பொறுப்பாளராக அஸ்வின், துவாக்குடி நகர பொறுப்பாளராக சக்திவேல் மற்றும் செயற்குழு உறுப்பினா்களாக 5 போ் என மொத்தம் 25 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT