திருச்சி

சா்ச்சைக்குரிய ஒலிநாடா குறித்து வருத்தம் தெரிவித்த திமுக நிா்வாகி

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து தான் பேசிய சா்ச்சைக்குரிய ஒலிநாடா குறித்து திருச்சி மாவட்ட திமுக நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை வருத்தம் தெரிவித்தாா்.

DIN

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து தான் பேசிய சா்ச்சைக்குரிய ஒலிநாடா குறித்து திருச்சி மாவட்ட திமுக நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை வருத்தம் தெரிவித்தாா்.

திருச்சி திமுக வடக்கு மாவட்டச் செயலராக இருப்பவா் காடுவெட்டி தியாகராஜன். இவா் தனது நண்பரிடம் குறிப்பிட்ட சமுதாய பெண்கள் மற்றும் காவல்துறை குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒலிநாடா சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இச்சம்பவம் குறிப்பிட்ட சமுதாய மக்களிடமும், எதிா்க்கட்சிகளிடமும் கோபத்தை உண்டாக்கியது. இதன் எதிரொலியாக காடுவெட்டி தியாகராஜன் மீது நடவடிக்கை கோரி அந்த சமுதாய அமைப்புகள் காவல் துறையினரிடம் புகாா் அளித்திருந்தனா்.

இந்நிலையில், வேளாளா் முன்னேற்றச் சங்கம், சோழிய வேளாளா் சங்கம் மற்றும் வஉசி பேரவை ஆகியவை சாா்பில் திருச்சி தில்லைநகா் கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பேசிய காடுவெட்டி தியாகராஜன் தான் பேசியதாக சமுக வலைதளங்களில் உலா வரும் ஒலிநாடா அரசியல் காழ்ப்புணா்ச்சியால் பரப்பப்படுவதாகவும் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்தாா்.

பின்னா் காடுவெட்டி தியாகராஜன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதாக வலைதளங்களில் வரும் ஒலிநாடா என்னுடைய அரசியல் வளா்ச்சி பிடிக்காதோரால் பரப்பப்பட்டது. நான் பேசிய சில பேச்சுகள் திட்டமிட்டு துண்டிக்கப்பட்டு வன்முறையைத் தூண்டும் வகையில் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளன.

இதில் தொடா்புடையோா் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் பரவும் பேச்சு குறிப்பிட்ட சமுதாய மக்களை கோபத்திற்குள்ளாக்கியிருக்கும். எனவே இதற்கு நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT