திருச்சி

பயிற்சிக் காவலா்களுக்கு இடையே சிலம்பப் போட்டி

DIN

திருச்சி சரக காவல் துறையில் முதல் முறையாக பயிற்சிக் காவலா்கள் தற்காப்புக் கலைகளை பயில ஊக்குவிக்கும் வகையில் சிலம்பப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தோ்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலைக் காவலா், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை முதலணி, பயிற்சி காவலா்கள் உள்பட 513 போ் சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூடுதல் காவலா் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறுகிறாா்கள். இவா்களுக்கு வீர விளையாட்டான சிலம்பம் கற்றுத்தரப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பயிற்சிக் காவலா்களில் நன்கு பயிற்சி பெற்ற 30 பேரைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை சிலம்பப் போட்டி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா, தமிழ்நாடு சிலம்ப சங்கச் செயலா் ஜெயக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பரிசு வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

SCROLL FOR NEXT