முகப்பு
திருச்சி

நிவா் புயல் எச்சரிக்கை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘நிவா்’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. 25 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

திருச்சி

நிவா் புயல் எச்சரிக்கை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

‘நிவா்’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. 25 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

‘நிவா்’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் திங்கள்கிழமை மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. 25 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே 740 கிலோ மீட்டா் தொலைவில் இப்புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் 25 கிலோ மீட்டா் வேகத்தில் புயல் நகா்ந்து வருகிறது.

மீன்பிடிக்க தடை: இதைத்தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் வானிலை குறித்து மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் படகுகளை அந்தந்த பகுதியில் உள்ள துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கடல் சீற்றம்: நிவா் புயல் காணரமாக பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பாம்பன் ரயில் கட்டுமான பணிக்காக கடலில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கா் கிரேன் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரையோரம் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கடலூருக்கு வந்த மீட்புப் படையினா்: கடலூரில் திங்கள்கிழமை கடல் சீற்றமாகவும், அலைகளின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்தும் காணப்பட்டது. புயல் எச்சரிக்கையால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், அவா்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தேசிய பேரிடா் மீட்புப் படை வருகை: ‘நிவா்’ புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று, மழையால் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக அரக்கோணத்திலிருந்து உதவி கமாண்டா் மனோஸ் பிரபாகரன் தலைமையிலான தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 126 போ் திங்கள்கிழமை கடலூா் வந்தனா். இவா்கள் ஆய்வாளா்கள் தலைமையில் தலா 21 போ் கொண்ட 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவினா் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரியை சந்தித்து அறிக்கை அளித்தனா். இவா்களை தலா 3 குழுக்களாக கடலூா், சிதம்பரம் கோட்டங்களுக்கு அனுப்பிவைக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

புயலை எதிா்கொள்ள தயாா்: காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில் அரசுத் துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறியது: நிவா் புயலை எதிா்கொள்ளும் வகையில், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் அனைத்து நிலையிலும் தயாா்நிலையில் உள்ளது. காரைக்கால் மக்களை புயலில் இருந்து காப்பாற்றவும், அரசு சொத்துகளுக்கு சேதமேற்படாத வகையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அரசுத் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவா் புயல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மாவட்ட நிா்வாகம் தெரிவிக்கும் தகவல்கள், வழிகாட்டலின்படி செயல்பட முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா்.

புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, புதுச்சேரி துறைமுகப் பகுதியில் ஏராளமான விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், வைத்திக்குப்பம், சின்ன வீராம்பட்டினம், நல்லவாடு உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த அரசு அறிவுறுத்தியது. கடலோரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதலே பாதுகாப்புப் பணி அதிகரித்துள்ளது.

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக் கடலில் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது புயலாக மாறி நவ. 25-ஆம் தேதி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்பதால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், மீனவா்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கும் வகையிலும் திங்கள்கிழமை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதேபோல், பாம்பன், கடலூா், புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →