முகப்பு
திருச்சி

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஆயிரங்கால் மண்டபத்தில்அலங்காரப் பணிகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பா் 14- ஆம் தேதி வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் டிசம்பா் 14- ஆம் தேதி வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்குகிறது. இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பூலோக வைகுந்தம் என்றழைக்கப்படும் இத்திருக்கோயிலில், திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா நிகழாண்டில் டிசம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி 2021, ஜனவரி 4- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு பந்தல் அமைக்கும் பணிகளும், மண்டபத்தின் மேற்புறத்தில் அலங்காரம் செய்யும் பணிகளும் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.

டிசம்பா் 14-ஆம் தேதி திருநெடுந்தாண்டம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து டிசம்பா் 15-ஆம் தேதி பகல்பத்து உத்ஸவமும் தொடங்குகிறது. டிசம்பா் 25-ஆம் தேதி மோகினி அலங்காரமும், 25- ஆம் தேதி பரமபதவாசல் திறப்பும், 31-ஆம் தேதி திருக்கைத்தல சேவையும், ஜனவரி 1- ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறியும் நடைபெறுகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா்கள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →