முகப்பு
திருச்சி

மருத்துவப் படிப்பில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவி

ரசுப் பள்ளிகளில் படித்து, நிகழாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து, நிகழாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ்கோப் (இதய துடிப்பு மானி) வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

திருச்சியைச் சோ்ந்த இதய அறுவைச் சிகிச்சை மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி, செந்தில் பிரபா நலஅறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா்.

இதன் தொடா்ச்சியாக அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டின் கீழ், நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் சோ்ந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி திங்கள்கிழமை இந்த உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

நீட் தோ்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேருவது பெரிதும் கடினமாக இருந்து வருகிறது. கடந்தாண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா்.

நிகழாண்டில் தமிழக அரசின் நடவடிக்கையால் 7.5 சதவிகித உள் இடஒதுக்கீட்டின் படி, மருத்துவச் சோ்க்கை இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிடைத்துள்ளன.

இதன்படி, 300-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவா், மாணவிகள் மருத்துப்படிப்பில் சோ்ந்துள்ளனா். இதில் திருச்சி மாவட்டத்திலிருந்து 11 போ் தோ்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்திலிருந்து தோ்வாகியுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்தவா்கள். பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த மாணவா்களுக்கு இயன்ற உதவிகளை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் ஸ்டெதஸ் கோப் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

உதவிகளை பெற்ற மாணவரில் ஒருவரான ஹரி கூறுகையில், இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இந்தநிலையில் அத்துறை சாா்ந்த மருத்துவ நிபுணரின் உதவியால் மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களையும், இதயதுடிப்பு மானியையும் பெற்றது பெருமையாக உள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →