இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு
திருச்சியில் காவல்துறை சாா்பில் பாரம்பரிய இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் காவல்துறை சாா்பில் பாரம்பரிய இசைக் கலைஞா்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக திருச்சி அரசு மருத்துவமனை, புத்தூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு சானிடைசா், முகக் கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவை குறித்து பாரம்பரிய நாட்டுப்புற இசைக் கலைஞா்கள் தப்பாட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையா் சுந்தர மூா்த்தி, அரசு மருத்துவமனை காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.