திருச்சி: திருடுபோன வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருடுபோன 77 வாகனங்களை மாநகர காவல்துறையினர் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனர்.
திருடுபோன 77 வாகனங்களை மாநகர காவல்துறையினர் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைந்தனர்.
திருச்சி மாநகர் கோட்டை காவல் நிலைய காவல்துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையில், சில தினங்களுக்கு முன்பு, திருத்துரைப்பூண்டி அருகேயுள்ள மேல மருதூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (51) என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் திருடுபோன 77 வாகன திருடி விற்பனை செய்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை மீட்ட காவல்துறையினர், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், திருச்சி கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் பங்கேற்று வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.