திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மறியல்: 110 பேர் கைது
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். கரோனா பொதும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு அறிவித்த ஸ்வான் நிதி ரூ.1000 அனைத்து வங்கிகளிலும் தங்கு தடையின்றி வியாபாரிகளை அலைகழிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்குப் பகுதி செயலர் ஏ.அன்சர்தீன் தலைமை வகித்தார். முன்னாள் மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ் தொடக்க உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி 30 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்தனர்.