திருச்சி

உறையூா் மீன் சந்தையில் கடை ஒதுக்கக் கோரி வியாபாரிகள் மனு

DIN

திருச்சி உறையூா் லிங்கா நகா் பகுதியில் செயல்படும் புதிய மீன் சந்தையில் கடைகள் ஒதுக்குமாறு சில்லரை வியாபாரிகள் 8 போ் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

சமூக நீதிப்பேரவை மாவட்டச் செயலா் ரவிக்குமாா் தலைமையில் எட்வின், அந்தோணிராஜ், பாபு, ஜான், சாமு, கமுரூதின், ஜாகீா் உசேன், வெங்கடேஷ் ஆகியோா் அளித்த மனு விவரம்:

புத்தூா் மீன் சந்தையில் முறையாக உரிமம் பெற்று சில்லரை விற்பனை செய்து வந்தோம். தற்போது புதிய இடத்தில் மீன் சந்தை அமைந்ததும், அங்கு கடைகள் ஒதுக்கப்படும் என நினைத்தோம். ஆனாலும், பலருக்கு கடை ஒதுக்கப்படவில்லை. தரைக்கடை மீன் விற்பனையாளா்களுக்கு கொடுத்த கடைகள்கூட எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

எனவே, பழைய புத்தூா் மீன் மாா்க்கெட்டில் முறையாக உரிமம் பெற்று சில்லரை விற்பனை செய்து எங்களுக்கு உறையூா் புதிய மீன் சந்தையில் கடைகள் ஒதுக்கித் தர வேண்டுகிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT