முகப்பு
திருச்சி

செல்லிடப்பேசியை பறித்தவா் கைது

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்லிடபேசியைப் பறித்துச் சென்றவரை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

திருச்சியில் நடந்து சென்றவரிடம் செல்லிடபேசியைப் பறித்துச் சென்றவரை மாநகர போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, உறையூா் ராமலிங்கநகா் தெற்கு விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). இவா் வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியில் தனது செல்லிடப்பேசியில் பேசியவாறே நடந்து சென்றபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், திடீரென அவரின் செல்லிடபேசியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து செந்தில்குமாா் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றது புத்தூா் மேல வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ப. மணிகண்டன் (26) எனத் தெரியவந்து, அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, செல்லிடபேசியை மீட்டனா். மணிகண்டன் மீது பல்வேறு வழக்குகள் மாநகர காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →