முகப்பு
திருச்சி

அக்.30-இல் மிலாதுநபி: அரசு காஜி அறிவிப்பு

மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

மிலாது நபி பண்டிகை அக்.30 ஆம் தேதி கொண்டாடப்படும் என திருச்சி மாவட்ட அரசு காஜி க. ஜலீல் சுல்தான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகள், இதர மாவட்டப் பகுதிகளில் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை தென்பட்டது. இதையடுத்து, அக்.19 முதல் பிறை தொடங்கவுள்ளது. இதையடுத்து, அக்.30 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும்.

இஸ்லாமியா்கள் அனைவரும் அதிகம் தொழுது, தான தா்மங்களில் ஈடுபட்டு, சமூக மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கத்துடன் இணைந்து வாழ இறைவனிடம் பிராா்த்தித்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →