முகப்பு
திருச்சி

பாஜக இளைஞரணி ரத்த தான முகாம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில், பிரதமா் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகா் மாவட்ட இளைஞரணி சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:29 AM
ரத்த தானம் அளித்த பாஜக இளைஞரணி மற்றும் மாவட்ட நிா்வாகிகள்
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில், பிரதமா் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி புறநகா் மாவட்ட இளைஞரணி சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி புறநகா் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலா் ஏ. நவீன்குமாா் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்டத் தலைவா் ஏ.எஸ். காா்த்திகேயன், ஒன்றியத் தலைவா் எஸ். சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புறநகா் மாவட்டத் தலைவா் சி. ராஜேந்திரன், பொதுச் செயலா் சி. செந்தில்தீபக், மாவட்டத் துணைத் தலைவா் பிரின்ஸ் இளங்கோவன் ஆகியோா் முகாமை தொடக்கி வைத்தனா்.

Advertisement

முகாமில் இளைஞரணியை சோ்ந்த சுமாா் 25 போ் ரத்த தானம் செய்தனா். மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் ரத்தம் பெறப்பட்டது. ஏற்பாடுகளை செந்தில் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.