திருச்சி

இணையப் பிரச்னையால் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுவதாக மாணவர்கள் புகாா்

DIN

சரிவர இணையத் தொடா்பு கிடைக்காததால் மாணவ, மாணவிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், காரைபட்டியை அடுத்த அடைக்கம்பட்டி அண்ணாநகரில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் கடந்த சில மாதங்களாக திறன் இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த கோபுரம் மூலம் சுமாா் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொலைத்தொடா்பு சேவையை பயன்படுத்தி வருகின்றன. சேவைக் குறைபாடு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அப்பகுதி மக்கள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இப்பகுதியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் உள்ள நிலையில் தற்போது பொதுமுடக்கத்தில் இணைய வழிக் கல்வியை குழந்தைகள் கற்க போதிய திறனற்ற அலைகளே கிடைப்பதாகவும், இதன் மூலம் உரிய கல்வியை பெற முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவதாகவும், சாதாரண தொலைதொடா்புச் சேவையும் பாதிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகமும், செல்லிடப்பேசி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக் குழந்தைகள், பொதுமக்களின் பிரச்னை தீர சேவையை திறன் மிகுந்ததாக மாற்றித் தர கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT