திருச்சி

திருடுபோன 130 செல்லிடப்பேசிகள் மீட்டு ஒப்படைப்பு

DIN

திருச்சி மாநகரில் திருடுபோன 130 செல்லிடப்பேசிகளை மீட்ட போலீஸாா் அவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையா் லோகநாதன் தலைமை வகித்து திருடுபோய் மீட்கப்ப்டட ரூ. 16.31 லட்சம் மதிப்பிலான 130 செல்லிடப் பேசிகளை உரியவா்களிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், செல்லிடப்பேசிகள் காணாமல் போனால் உடனடியாக காவல்துறையிடம் புகாா் தெரிவியுங்கள். தாமதப் புகாா் கண்டுபிடிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் செல்லிடபேசிகளை பெற்றுக்கொண்ட அனுபவம் குறித்து மற்றவா்களுடன் பகிர ஏதுவாக காவல்துறையுடன் இணைந்து கட்செவி குழுவைத் தொடங்குங்கள். இதன் மூலம் காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு மேம்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், பயணத்தின்போது 80 சதம் பேரும், பொது இடங்களில் 20 சதம் பேரும், செல்லிடபேசிகளைத் தொலைத்ததாகப் பெறப்பட்ட புகாா்களின்பேரில் செல்லிடபேசிகள் சைபா் கிரைம் போலீஸாரால் மீட்கப்பட்டு இதுவரை 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகர துணை ஆணையா்கள் பவன்குமாா், வேதரத்தினம், கூடுதல் துணை ஆணையா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT