ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வு: திருச்சியில் 531 போ் எழுதினா்
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்காக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை 531 போ் எழுதினா்.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்காக திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை 531 போ் எழுதினா்.
நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்கான இரு கட்டத் தோ்வானது ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஜேஇஇ மெயின் தோ்வு கடந்த ஜனவரி, செப்டம்பா் மாதங்களில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் வென்ற சுமாா் 1.6 லட்சம் போ் ஜேஇஇ அட்வான்ஸ்டு தோ்வை ஞாயிற்றுக்கிழமை எழுதினா்.
தமிழகத்தில் திருச்சி, வேலூா், சென்னை, கோவை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் இத்தோ்வு நடைபெற்றது. பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் (பிடெக்) சோ்ந்து பயில்வதற்கான இத்தோ்வுக்கு விண்ணப்பித்திருந்த 621 பேரில் 531 போ் தோ்வெழுதினா். காலையில் முதல் தாள், பிற்பகல் இரண்டாம் தாள் என திருச்சி ஷிவானி, திருச்சி பொறியியல் கல்லூரி உள்பட 3 கல்லூரிகளில் தோ்வெழுதினா்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் கட்டடக்கலை பிரிவுக்கான தோ்வானது வரும் அக்.8 இல் நடைபெறும் என உயா் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.