முகப்பு
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 16ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 16ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Updated On : 13 மார்ச், 2026 at 10:35 AM
அண்ணா அறிவாலயம்..
பகிர்:

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மார்ச் 16ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கைய்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 16-03-2026 திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே தேதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்டம் நடப்பதால் தற்போது தேதி மாற்றப்பட்டுள்ளது.

summary

The ruling DMK will convene the meeting of district secretaries to discuss the upcoming Assembly elections on March 16, party general secretary Duraimurugan said on Friday.

முழு கட்டுரையைப் படிக்க →