சென்னை : திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று(ஜன. 20) மாலை தொடங்கியது. முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆயத்தப் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது என்று அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.