தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஜனவரி 20ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜன. 20ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்தப் பயணம் தொடங்கிய மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.