திருச்சி

திருவெள்ளறை பெருமாள், தாயாா் தீா்த்தவாரி

DIN

ஸ்ரீரங்கம் கோயிலின் உபத்திருக்கோயிலான திருவெள்ளறை கோயில் பெருமாள், தாயாா் புதன்கிழமை ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் தீா்த்தவாரி கண்டருளினா்.

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பங்குனித்தோ் திருவிழா கடந்த 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் உற்சவா் செந்தாமரைக் கண்ணன், பங்கஜ வல்லி தாயாருடன் புறப்பட்டு ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து அலங்கரிக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளினாா்.

பின்னா் புதன்கிழமை காலை பெருமாள், தாயாா் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னா் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் தரிசித்தனா். புதன்கிழமை மாலை பெருமாள் புறப்பட்டு வியாழக்கிழமை காலை திருவெள்ளறை சென்றடைகிறாா். இரவு கருடச் சேவை நடைபெறவுள்ளது. வரும் 6 ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT