நடிகா் வாகை சந்திரசேகா் பிரசாரம்
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேருவை ஆதரித்து நடிகரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான வாகை சந்திரசேகா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேருவை ஆதரித்து நடிகரும், தலைமைக் கழகப் பேச்சாளருமான வாகை சந்திரசேகா் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனா். இருந்தபோதும் திருச்சி மேற்குத் தொகுதியை நன்கறிந்த கே.என். நேருவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்தத் திட்டங்களையும் திருச்சிக்கு கொண்டு வரவில்லை. ஆனால் நேரு அமைச்சராக இருந்தபோது பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றாா்.