திருச்சி

வளநாடு அருகே சாலை மறியல்

DIN

மணப்பாறை அடுத்த வளநாடு அருகே வாக்காளா் ஒருவரை போலீஸாா் தாக்கியதாகக் கூறி செவ்வாய்க்கிழமை புதிய தமிழகம் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மருங்காபுரி ஒன்றியம் வளநாடு அருகேயுள்ள தேனூா் வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்காக இருந்த வளநாடு காவல் உதவி ஆய்வாளா் ரோந்து சென்றபோது, தனது வீட்டு முன் கருப்பு சட்டையுடன் இருந்த இளைஞரை, தோ்தல் புறக்கணிப்பிற்காக வந்தவா் கருதி, கழுத்தில் கை வைத்துத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த நபா் புதிய தமிழகம் கட்சி தொண்டா் என்பது தெரியவர, கட்சியின் மாவட்ட செயலரும், சுயேச்சை வேட்பாளருமான சி. இளையராஜா தலைமையில் அப்பகுதி கட்சி இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT